நள்ளிரவில் வீடு புகுந்து இளைஞர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை: டெல்லியில் பயங்கரம்

நள்ளிரவில் வீடு புகுந்து இளைஞர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை: டெல்லியில் பயங்கரம்

டெல்லியில் 19 வயது இளைஞர் வீடு புகுந்து மர்மநபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்து.

வடக்கு டெல்லியில் உள்ள கஜூரி காஸ் பகுதியைச் சேர்ந்தவர் சோஹைல்(19). அவரது உறவினர் வீட்டில் தங்கி ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று நள்ளிரவு மார்பில் குண்டு பாய்ந்த நிலையில் சோஹைல் வீட்டில் மயங்கிக் கிடந்தார்.வேலை முடிந்து வந்த அவரது உறவினர்கள், அவரை மீட்டு ஜேசிபி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், ஏற்கனவே இருந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில்,” ராம் காலனியில் உள்ள தனது உறவினர் வீட்டில் 6 ஆண்டுகளாக சோஹைல் வசித்து வந்துள்ளார். சிலர் அவரை சுட்டு விட்டுத் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரைப் பிடித்துள்ளோம். எதற்காக சோஹைலைச் சுட்டுக் கொன்றார்கள் என்று விசாரித்து வருகிறோம்” என்றனர். இந்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in