லோடு ஆட்டோ மோதி வக்கீல் பலி: டூவீலரில் வீடு திரும்பிய போது விபத்து

லோடு ஆட்டோ மோதி வக்கீல் பலி: டூவீலரில் வீடு திரும்பிய போது விபத்து

தூத்துக்குடியில் பைக், லோடு ஆட்டோ நேருக்கு, நேர் மோதியதில் இளம் வழக்கறிஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட முத்தையாபுரம் பாரதிநகரைச் சேர்ந்தவர் பார்வதி நாதன்(25). நெல்லை அரசு சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று முடித்த இவர், தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ஒருவரிடம் ஜீனியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று பொங்கல் என்பதால் இவர் உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தார். அங்கு இருந்து இரவு வீடு திரும்பினார்.

ஸ்பிக் நகர் அத்திமரப்பட்டி சாலையில் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த லோடு ஆட்டோ ஒன்று, பார்வதி நாதனின் டூவீலர் மீது மோதியது. இந்த விபத்தில் வழக்கறிஞர் பார்வதிநாதன் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். தகவல் அறிந்து விரைந்துவந்த முத்தையாபுரம் ஆய்வாளர் ஜெயசீலன், பார்வதிநாதன் உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனை அனுப்பி வைத்தார். சாலை விபத்தில் இளம் வழக்கறிஞர் உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in