காதலித்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் நிச்சயம்: ஆத்திரத்தில் காதலன் எடுத்த அதிர்ச்சி முடிவு

காதலித்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் நிச்சயம்: ஆத்திரத்தில் காதலன் எடுத்த அதிர்ச்சி முடிவு

தான் காதலித்த பெண்ணிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதால், ஆத்திரத்தில் அப்பெண்ணை வீடு புகுந்து குத்திக் கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மதுரை பொன்மேனி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி மகள் அபர்ணா (19). நேற்று மாலை பாண்டி வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில், அபர்ணா மட்டும் தனியாக வீட்டில் இருந்துள்ளார். அப்போது, மர்ம நபர் வீடு புகுந்து அபர்ணாவை குத்திக் கொலை செய்துள்ளார்.

அபர்ணாவின் அலறல் சத்தம் கேட்ட, அருகில் வசிப்பவர்கள் உடனே காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எஸ்.எஸ் காலனி காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

முதற்கட்ட விசாரணையில், விராட்டிபத்தைச் சேர்ந்த ஹரிஹரன், அபர்ணாவை பிளஸ்-2 படித்தபோது காதலித்து வந்ததாகவும். அபர்ணாவை பெண் கேட்டு குடும்பத்துடன் வந்தபோது பெண் கொடுக்க அவர் வீட்டில் மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், அபர்ணாவின் வீட்டார் முனீஸ்வரனுடன் ஆகஸ்ட் மாதம் திருமணம் நடத்த நிச்சயிக்கப்பட்ட நிலையில், இதனை அறிந்து ஆத்திரமுற்ற ஹரிஹரன் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த எஸ்.எஸ் காலனி காவல்துறையினர் தேனி மாவட்டம், பெரியகுளத்தில் பதுங்கியிருந்த ஹரிஹரனை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in