ஃபேஸ்புக் பழக்கத்தால் 10 லட்சத்தை இழந்த இளம்பெண்: இங்கிலாந்து குடிமகனைத் தேடும் போலீஸ்

ஃபேஸ்புக் பழக்கத்தால் 10 லட்சத்தை இழந்த இளம்பெண்: இங்கிலாந்து குடிமகனைத் தேடும் போலீஸ்

இங்கிலாந்து குடிமகன் என ஃபேஸ்புக் மூலம் அறிமுகமாகி பெண்ணிடம் 10 லட்ச ரூபாயை மோசடி செய்தவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸைச் சேர்ந்த இளம்பெண் மன்பிரித் கவுர். ஃபேஸ்புக்கில் இவருக்கு இங்கிலாந்து குடிமகன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு ஒருவர் நண்பராகியுள்ளார். இதையடுத்து இவர்கள் இருவரும் நட்பாக பழகியுள்ளனர். அத்துடன் ஃபேஸ்புக் மூலம் சாட்டிங்கும் செய்துள்னர். இந்த நிலையில், இங்கிலாந்தில் இருந்து விலை உயர்ந்த பரிசுப்பொருள் அனுப்புவதாக மன்பிரித் கவுரிடம் ஃபேஸ்புக் ஆண் நண்பர் கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் இருந்து முகம் தெரியாத நபர், ஃபேஸ்புக்கில் பழகிய நிலையில், தனக்கு விலை உயர்ந்த பொருள் அனுப்புகிறார் என்பதை நினைத்து மன்ப்ரித் கவுர் சந்தோஷமடைந்தார்.

இந்த நிலையில், அவரது ஃபேஸ்புக் நண்பர், மன்பிரித் கவுரைத் தொடர்பு கொண்டுள்ளார். விலை உயர்ந்த பொருளை அனுப்ப சுங்கத்துறையிடம் 10 லட்ச ரூபாய் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். எனவே, 10 லட்ச ரூபாயை அனுப்ப முடியுமா என்று மன்பிரித் கவுரிடம் கேட்டுள்ளார். தனக்கு விலை உயர்ந்த பொருள் கிடைக்கப் போகிறதே என்ற ஆசையில், அந்த நபர் சொன்ன கணக்கிற்கு 10 லட்ச ரூபாயை அனுப்பியுள்ளார்.

ஆனால், அவர் எதிர்பார்த்தபடி பரிசுப்பொருள் எதுவும் வரவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மன்பிரித் கவுர், காவல் நிலையத்தில் புகார் செய்தார். ஃபேஸ்புக் மூலம் பழகிய பெண்ணிடம் 10 லட்ச ரூபாயை மோசடி செய்த நபரை போலீஸார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அமிர்தசரஸில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in