கையை அறுத்து வீடியோ எடுத்த இளம்பெண்: உறவினர்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி விட்டு தற்கொலை

கையை அறுத்து வீடியோ எடுத்த இளம்பெண்: உறவினர்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி விட்டு தற்கொலை

தன் கையை தானே அறுத்து தன் செல்போனில் அதை புகைப்படம், வீடியோவாக எடுத்துத் தன் உறவுகளுக்கு அனுப்பிவிட்டு இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடை சேர்ந்தவர் ராஜேஷ். இவரும் பாளையங்கோட்டை ஜோதிபுரத்தை சேர்ந்த சுபாஷினி(23) என்பவரும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர். இந்தத் தம்பதிக்கு ஒரு குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் தன் கணவரோடு கருத்து முரண்பாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டார். தன் குழந்தையோடு சுபாஷினி தன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல், தன் அறைக்குச் சென்ற சுபாஷினி வெகுநேரமாகியும் எழுந்திருக்கவில்லை உறவினர்கள் பார்த்தபோது சுபாஷினி அறைக்குள் தூக்குப்போட்டு தொங்கியிருந்தார்.

இதேபோல் சுபாஷினி நேற்று இரவு தன் கையை தானே அறுத்துக்கொண்டு தன் உறவினர்கள் அனைவருக்கும் புகைப்படம், வீடியோ எடுத்து வாட்ஸ் அப் வழியே அனுப்பியிருக்கிறார். முன்னீர்பள்ளம் போலீஸார் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுபாஷினிக்கு திருமணம் முடிந்து 4 ஆண்டுகளே ஆவதால் கோட்டாட்சியர் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in