15 நிமிடத்தில் டிக்கெட் விற்பனையாகிவிடும்: தரிசனத்துக்கு தயாராக இருக்கும் பக்தர்கள்!

15 நிமிடத்தில் டிக்கெட் விற்பனையாகிவிடும்: தரிசனத்துக்கு தயாராக இருக்கும் பக்தர்கள்!

2023-ம் ஆண்டுக்கு பொதிகை மலையிலுள்ள மாமுனிவர் அகஸ்தியர் ஆலயத்தில் தரிசனம் செய்ய போகும் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு செய்வதற்கு ஜனவரி 6-ம் தேதி காலை 11 மணிக்கு புக்கிங் தொடங்குவதாக கேரள வனத்துறை அறிவித்துள்ளது. நபர் ஒருவருக்கு ரூ.1331 கட்டணமாகும். நபர் ஒருவருக்கு 1,331 ரூபாய் வீதம் 5 அல்லது 10 நபர்கள் கொண்ட குழுவாக முன்பதிவு செய்யலாம்.

அகத்தியர் தரிசனம் ஜனவரி 14 முதல் பிப்ரவரி 26 வரை நாள் ஒன்றுக்கு 100 பேர் வீதம் அனுமதிக்கப்படுவர். முன்பதிவு செய்பவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே forest.kerala.gov.in என்ற கேரள வனத்துறை இணையதளத்திற்கு சென்று USERNAME & PASSWORD தயாராக்கி கொள்ள வேண்டும். யாத்திரை வரும் பக்தர்கள் அனைவரும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஆதார் நம்பர் மற்றும் பெயர்களை ஆன்லைன் விண்ணப்பத்தில் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே தயாராக நிரப்பி வைத்திருக்க வேண்டும். ரயில்வே டிக்கெட் போல 15 நிமிடங்களுக்குள் டிக்கெட் விற்று தீர்ந்துவிடும் என்பதால், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே ஆன்லைன் விண்ணப்பங்களை நிரப்பி தயாராக இருக்க வேண்டும்.

ஒரு நபருக்கு ரூபாய் 1,331 ரூபாய் வீதம் அதிகபட்சமாக ஒரே நேரத்தில் 10 பேருக்கு மட்டுமே முன்பதிவு செய்யலாம். முன்பதிவு கட்டணங்களை Internet Banking, Mobile Banking, Debit Card, Credit Card முறையில் செலுத்தலாம். அதிவேக இணைப்புள்ள இன்டர்நெட்டை பயன்படுத்தலாம். அல்லது அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலம் டிக்கெட் எடுக்கலாம். பொதிகை மலை யாத்திரை மீது விருப்பமுள்ள அன்பர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும். மேலும் விவரங்களுக்கு கேரள அரசு வனத்துறை அலுவலக போன் நம்பரான 04712360762 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உங்கள் சந்தேகங்கள் தீர்த்து வைக்கப்படும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in