பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: ரேஷன் கடையில் இனி போன் பே, கூகுள் பே பயன்படுத்தலாம்!
பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: ரேஷன் கடையில் இனி போன் பே, கூகுள் பே பயன்படுத்தலாம்!

பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: ரேஷன் கடையில் இனி போன் பே, கூகுள் பே பயன்படுத்தலாம்!

ரேஷன் கடையில் ஜிபே, கூகுள் பே மூலம் பொதுமக்கள் பணம் செலுத்தலாம். இந்த முறை காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதற்கட்டமாக நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.

பெட்டிக்கடை மூலம் பெரிய நிறுவனம் வரை கூகுள் பே, போன் பே போன்ற பணப் பரிவர்த்தனை செயலிகள் வைத்திருக்கிறார்கள். குக்கிராமங்களில் கூட QR code அட்டை மூலம் பணம் செலுத்தும் வசதி வந்துவிட்டது. ஆனால், ரேஷன் கடைகளில் சில்லறையாக பணம் கொடுத்துவிட்டு சர்க்கரை, கருப்பு உள்ளிட்ட பொருட்கள் வாங்க வேண்டிய சூழல் உள்ளது. பல ரேஷன் கடைகளில் சில்லறைப் பிரச்சினை இருந்து வருகிறது. இதனால் பொதுமக்களுக்கும், கடை ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்படுகிறது.

இந்தநிலையில் அனைத்து ரேஷன் கடைகளிலும் கூகுள்பே, போன் பே மற்றும் பேடிஎம் மூலம் பணப் பரிவர்த்தனை செய்யலாம் என கூட்டுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த முறை காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதற்கட்டமாக நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. மே மாதம் இறுதிக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இந்த யூபிஐ வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, ரேஷன் கடைகளிலும் யூபிஐ மூலம் பணம் பரிவர்த்தனை செய்துகொள்ள முடியும். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in