மக்களே... இனி ரேஷன் கடையில் கூகுள் பே மூலம் பணம் செலுத்தலாம்: தமிழக அரசு அறிவிப்பு

மக்களே... இனி ரேஷன் கடையில் கூகுள் பே மூலம் பணம் செலுத்தலாம்: தமிழக அரசு அறிவிப்பு

"நியாயவிலைக் கடைகளில் கூகுள் பே, பேடிஎம் போன்ற யுபிஏ வசதி மூலம் பணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்படும்" என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் இன்று பேசியபோது இதனை தெரிவித்த அவர், முதல் கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 நியாயவிலைக் கடைகளை மாதிரி விலையை நியாயவிலைக் கடைகளாக மாற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காலியிடங்கள் இருப்பின் 10 முதல் 50 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட உணவுப் பொருள் கிடங்குகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அத்தியாவசிய பொருட்களை பெற மக்கள் இரண்டு கிலோமீட்டருக்கு மேல் பயணிக்க வேண்டிய நிலை இல்லாமல் இருப்பதை உறுதி செய்வதே இலக்கு என்றும் கூறினார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட நியாயவிலைக் கடைகளில் 5 கிலோ, 2 கிலோ சமையல் எரிவாயுகள் விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த அமைச்சர், நியாயவிலைக் கடைகளில் அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருள்களை எவர்சில்வர் கொள்கலங்களில் வைத்து விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அத்தியாவசிய பொருள்கள் உள்ள மூட்டைகளை தரையில் வைப்பதற்கு பதில் இரும்பு ஷெல்ஃபுகளில் அடுக்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in