யோகி ஆதித்யநாத் பாதுகாப்பு பணி போலீஸ்காரர் மரணத்தில் மர்மம்

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பாதுகாப்பு பணி போலீஸ்காரர் ஒருவர், தனது ரிவால்வரின் குண்டு தலையில் பாய்ந்த நிலையில் மர்ம மரணமடைந்திருக்கிறார்.

யோகி ஆதித்யநாத்தின் பிரத்யேக பாதுகாப்பு பணிக்கான போலீஸார் குழுவில் சந்தீப் யாதவ் என்ற தலைமைக்காவலரும் அடங்குவார். முதல்வர் பாதுகாப்புக்கான பணியில் இன்று ஈடுபட இருந்த நிலையில், நேற்று தனது வீட்டில் சந்தீப் யாதவ் தலையில் குண்டு பாய்ந்து மரணமடைந்தார். அவரது சர்வீஸ் ரிவால்வரின் குண்டு பாய்ந்தே சந்தீப் யாதவின் மரணம் நிகழ்ந்திருக்கிறது.

ரிவால்வரை துடைக்கும் பணியில் ஈடுபட்டபோது விபத்தாக அது வெடித்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் சந்தீப் யாதவ் தலையில் குண்டு பாய்ந்திருப்பதால், அது தற்கொலையா அல்லது மர்ம மரணமா என்ற கேள்விகளையும் எழுப்பி உள்ளது.

“முதல்வரின் பாதுகாப்பு பணியில் அடுத்த நாள் இணைய இருந்த நிலையில், தனது வீட்டில் சர்வீஸ் ரிவால்வரை சந்தீப் யாதவ் சுத்தம் செய்திருக்கிறார். அப்போது எதிர்பாரா வகையில் அது வெடித்ததில் தலையில் குண்டு பாய்ந்து ஸ்பாட்டிலேயே அவர் இறந்தார்” என ஏஎஸ்பி அசுதோஷ் மிஸ்ரா பேட்டி அளித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in