
உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பின் 30 ஆயிரம் பெண்கள் போலீஸ் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடக்கிறது. அவர் 2வது முறையாக முதல்வராகி, மாநில மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான நலத்திட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் கடந்த 7 ஆண்டுகளில் பெண் காவலர்களின் எண்ணிக்கை என்பது 3 மடங்கு வரை உயர்ந்துள்ளது என யோகி ஆதித்யநாத் பெருமையாக கூறியுள்ளார். சமீபத்தில் உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் பெண்களுக்கான மேம்பாடு தொடர்பான பொதுக்கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் உரையாற்றிய யோகி ஆதித்யநாத், உத்தரபிரதேச மாநில காவல்துறையில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக 20 சதவீத இடஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் பெண் போலீஸ் எண்ணிக்கை என்பது தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 6 ஆண்டுகளில் காவல்துறையில் இணையும் பெண்களின் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டு வரை 10,000 பெண் போலீஸார் இருந்த நிலையில், தற்போது 30,000 பேர் புதிதாக வேலைக்கு சேர்ந்துள்ளனர். இதனால், மாநிலத்தில் உள்ள பெண் போலீஸாரின் எண்ணிக்கை 40,000 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் நாடாளுமன்றம், சட்டசபையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு மசோதா கொண்டு வந்து நிறைவேற்றி உள்ளது. இது அரசியலில் அதிக பெண்களுக்கு அங்கீகாரம் வழங்கும். மத்தியிலும், மாநிலத்திலும் சரி பாஜகவின் கொள்கை என்பது ஒன்று தான். அது என்னவென்றால் பெண்களுக்கு அதிகாரங்கள் வழங்கி வேண்டும் என்பது தான். அதேபோல், உத்தரபிரதேசத்தில் பாஜக அரசு பல்வேறு புதிய நலத்திட்டங்களை செயல்படுத்த தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் வாசிக்கலாமே...
சிவகாசி : தீபாவளிக்கு ரூ.6,000 கோடிக்கு பட்டாசுகள் விற்பனை!
நாளை தெறிக்கப் போகுது தமிழகம்... 234 தொகுதிகளில் 8,647 கி.மீ தூரம் திமுக வாகனப் பேரணி!
பனிக்குடம் உடைந்து கதறிய கர்ப்பிணி: 108 ஆம்புலன்ஸில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!!
இடுப்பளவு நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்: தொடர் மழையால் விவசாயிகள் கண்ணீர்!