சிறுத்தை குட்டிக்கு பால் ஊட்டிய உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்: வைரல் வீடியோ!

சிறுத்தை குட்டிக்கு பால் ஊட்டிய உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்: வைரல் வீடியோ!

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் உயிரியல் பூங்காவில் உள்ள சிறுத்தை குட்டிக்கு பால் ஊட்டிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் எம்.பி ரவி கிஷனுடன் இன்று கோரக்பூர் உயிரியல் பூங்காவில் ஆய்வு செய்தார். அப்போது கால்நடை மருத்துவர்கள் மற்றும் மிருகக்காட்சிசாலை அதிகாரிகள் அவருடன் இருந்தனர்.

உத்தரபிரதேச அரசின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் வெளியான வீடியோவில், முதல்வர் யோகியிடம் சிறுத்தை குட்டி ஆரம்பத்தில் பால் குடிக்க தயங்குகிறது. பின்னர் கால்நடை மருத்துவர் அதை மீண்டும் யோகி ஆதித்யநாத்திடம் கொண்டு வந்தார். முதல்வர் பாதுகாப்புக்காக ஆரஞ்சு நிற ரப்பர் கையுறைகளை அணிந்து, குட்டியைப் பிடித்து மீண்டும் உணவளிக்க முயற்சிக்கிறார். இப்போது அந்த சிறுத்தைக் குட்டி பாட்டிலில் உள்ள பாலை வேகமாக குடித்தது.

அதன் பிறகு, சிறுத்தைகளை வைத்திருக்கும் மிருகக்காட்சிசாலையின் கூண்டுகளையும் முதல்வர் பார்வையிட்டார். மேலும் இந்த வீடியோவில், மிருகக்காட்சிசாலையின் அதிகாரி ஒருவர் கூண்டுகளின் அம்சங்கள் மற்றும் விலங்குகள் எவ்வாறு நிர்வகிக்கப்படுகின்றன என்பதை விளக்கமாக தெரிவித்தார்.

ஷஹீத் அஷ்பக் உல்லா கான் உயிரியல் பூங்கா என்றும் அழைக்கப்படும் இந்த மிருகக்காட்சிசாலையை கடந்த ஆண்டு மார்ச் மாதம் யோகி ஆதித்யநாத் திறந்து வைத்தார்.

முதல்வர் யோகி ஆதித்யநாத் சிறுத்தைக்கு பால் ஊட்டும் வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in