எந்த மாவட்டத்திலும் மதமாற்றம் நடைபெறாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்: யோகி ஆதித்யநாத் அதிரடி உத்தரவு

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

மாநிலம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையை சுமூகமான சூழ்நிலையில் கொண்டாட வேண்டும் என்றும், எந்த மாவட்டத்திலும் மத மாற்றம் நடைபெறாமல் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

உத்தர பிரதேச மாநில மூத்த அரசு அதிகாரிகள் மற்றும் மாவட்ட தலைமையகங்களில் நியமிக்கப்பட்டுள்ள பல்வேறு உயர் அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமையை முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆய்வு செய்தார்.

அப்போது, சில மாதங்களுக்கு முன்பு மாநிலம் தழுவிய இயக்கத்தில் வழிபாட்டு தலங்களில் இருந்து அகற்றப்பட்ட ஒலிபெருக்கிகளை மீண்டும் நிறுவுவது குறித்து கவலை தெரிவித்த முதல்வர், அதை ஏற்க முடியாது என்று அதிகாரிகளிடம் கூறினார். இது தொடர்பாக பேசிய அவர், “சில மாதங்களுக்கு முன்பு, மத வழிபட்டு தலங்களில் இருந்து ஒலிபெருக்கிகளை பேச்சுவார்த்தை மூலம் அகற்றி முடித்தோம். பொது நலனுக்கு முன்னுரிமை அளித்து, மக்கள் தன்னிச்சையாக ஒலிபெருக்கிகளை அகற்றினர். இது நாடு முழுவதும் பாராட்டப்பட்டது. சமீப காலமாக, மாவட்ட சுற்றுபயணங்களின் போது, சில மாவட்டங்களில் மீண்டும் இந்த ஒலிபெருக்கிகள் பொருத்தப்படுவதை நான் கண்டேன். இதை ஏற்க முடியாது. உள்ளூர் மக்களுடன் உடனடியாக தொடர்பு கொண்டு இதனை தடுத்து நிறுத்த வேண்டும்”என்று அவர் கூறினார்.

மேலும், மாநில அரசுத் துறைகளின் ஒருங்கிணைந்த முயற்சியால், கடந்த ஐந்தரை ஆண்டுகளில் மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்களில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in