மாணவியிடம் ஆபாச பேச்சு, செல்போனில் குறுஞ்செய்தி: ஒய்எம்சிஏ கல்லூரி முதல்வர் மீது வழக்கு

மாணவியிடம் ஆபாச பேச்சு, செல்போனில் குறுஞ்செய்தி: ஒய்எம்சிஏ கல்லூரி முதல்வர் மீது வழக்கு

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஒய்எம்சிஏ கல்லூரி முதல்வர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அண்ணாசாலை நந்தனம் பகுதியில் (ஓய்எம்சிஏ) உடற்கல்வியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இக்கல்லூரியில் முதலாமாண்டு படித்து வரும் 23 வயதுடைய மாணவி நேற்று முன்தினம் சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதில், கடந்த மூன்று மாதங்களாக கல்லூரி முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் ஆபாசமாக பேசியும், செல்போனில் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியும் பாலியல் தொந்தரவு அளித்து வருகிறார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், ஓய்எம்சிஏ கல்லூரி முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் மீது பெண் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவிக்கு கல்லூரி முதல்வர் பாலியல் தொல்லை கொடுத்த தகவல் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in