நேற்று தமிழ், இன்று ஆங்கிலம்; 50 ஆயிரம் பிளஸ்2 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதவில்லை: தொடரும் அதிர்ச்சி

பிளஸ்2 மாணவ, மாணவிகள் தேர்வு
பிளஸ்2 மாணவ, மாணவிகள் தேர்வு நேற்று தமிழ், இன்று ஆங்கிலம்; 50 ஆயிரம் பிளஸ்2 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதவில்லை: தொடரும் அதிர்ச்சி

12-ம் வகுப்பு ஆங்கில முதல்தாள் தேர்வை 50 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு கடந்த 13-ம் தேதி தொடங்கியது. இந்த பொதுத் தேர்விற்கு 8,51,303 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 8,01,744 மாணவர்கள் மட்டுமே தேர்வெழுதினர். சரியாக, 49,559 மாணவர்கள் மாணவ, மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை. அதேபோன்று , தனித்தேர்வர்களில் மொத்தம் 8,901 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 7,786 மாணவர்கள் தேர்வெழுதினர். 1,115 நபர்கள் தேர்வு எழுத வரவில்லை.

வராத மாணவர்களை கண்டறிந்து வரும் ஜூன் மாதம் வரக்கூடிய துணைத்தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிக்கு வருகைபுரிந்த மாணவர் தேர்வுக்கு மட்டும் வராமல் இருந்தால் அவர்களை தலைமை ஆசிரியர்கள் மூலம் கண்டறிந்து வரக்கூடிய நாட்களில் இதர பாடங்களை பொதுத்தேர்வு எழுத வைக்கவும், நீண்ட நாள் வராமல் உள்ள மாணவர்களையும் மாவட்ட நிர்வாகங்கள் மூலம் கண்டறியவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று செய்தியாளர்களிடம் பேசியபோது, பிளஸ்2 அரசு பொதுத்தேர்வின் முதல் நாள் தமிழ் தேர்வை எழுதாத 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மறுபடியும் வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் தொடர்ந்து தமிழக அரசு, மாணவர்கள் அதிகமாக பள்ளிக்கு வர வேண்டும் என்று கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்றும் இதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், இன்று நடைபெற்ற 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆங்கில முதல் தாள் தேர்வை 50 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. பிளஸ்1 மொழித் தேர்வு நேற்று தொடங்கியது. இந்தத் தேர்வை 12,660 மாணவ, மாணவிகள் எழுதவில்லை. இந்த நிலையில் 12-ம் வகுப்பு ஆங்கிலம் முதல்தாள் தேர்வு இன்று நடைபெற்றது. இந்த தேர்வை 50 ஆயிரம் மாணவ- மாணவிகள் எழுதவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. தொடர்ந்து மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வை எழுதாமல் இருந்து வருவது பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in