ஹைதராபாத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை: இடியுடன் இன்று கனமழை பெய்யும்!

மழை
மழை

ஹைதராபாத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை மையம் (ஐஎம்டி) இன்று மாலை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் எச்சரித்துள்ளது.

மழை
மழை

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் நேற்று மாலையில் இருந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் வெள்ளமென தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஹைதராபாத்தில் இன்று மாலை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது. அத்துடன் ஹைதராபாத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள செரிலிங்கம்பள்ளியில் நேற்று கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக 42.3 மி.மீ மழை பதிவானது. சாந்தா நகரில் 37.5 மி.மீ மழை பெய்துள்ளது. ஐஎம்டி கணிப்பின்படி, ஹைதராபாத்தில் நாளையும் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in