
கேரள மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை இம்முறை மிகத் தாமதமாகவே தொடங்கியது. ஆனாலும் அதன் பின்னர் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கேரளா மேடு, பள்ளம், மலைகள் சூழ்ந்த பகுதியாகும். இதனால் மழை நீர் தேங்கி பல பகுதிகளிலும் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கேரளத்தில் பெய்துவரும் கனமழையால் வீடு இடிந்து விழுந்தது. மரம் முறிந்து விழுந்தது உள்ளிட்ட பல்வேறு சூழல்களில் இதுவரை எட்டுபேர் உயிர் இழந்து உள்ளனர். தாழ்வான பகுதிகளிலும், அணை,கரையோரப் பகுதிகளிலும் வசிக்கும் 7800 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் மாற்றப்பட்டுள்ளனர். மாநில பேரிடர் மேலாண்மை முகமை சார்பில் நூற்றுக்கும் அதிகமான முகாம் இல்லங்களும் இதற்கென அமைக்கப்பட்டு உள்ளது.
கேரளா மாநில வானிலை ஆய்வுமையம் வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. தொடர் மழையின் காரணமாக கேரளத்தில் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.