வரலாறு படைத்தார் ஜி ஜின்பிங்: மூன்றாவது முறையாக சீனாவின் அதிபரானார்

வரலாறு படைத்தார்  ஜி ஜின்பிங்:  மூன்றாவது முறையாக சீனாவின் அதிபரானார்

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டில் ஜி ஜின்பிங் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் சீன வரலாற்றில் முதன் முறையாக மூன்றாவது முறையாக ஜி ஜின்பிங் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு, தலைநகர் பெய்ஜிங்கில் அக். 16-ம்தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. இந்த மாநாட்டில் 2,300 பேர் கலந்து கொண்டனர். சீன அரசியலமைப்பு சட்டத்தின்படி, அதிபர் 10 ஆண்டு காலம் மட்டுமே பதவி வகிக்க முடியும். அதன்படி அதிபர் ஜி ஜின்பிங்கின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்தது.

இதில், மூன்றாவது முறையாக தற்போதைய பொதுச்செயலாளரான ஜி ஜின்பிங் தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் மூன்றாவது முறையாக ஜி ஜின்பிங் அதிபராக தேர்வாகியுள்ளார். கடந்த 2012-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 10 ஆண்டுகளாக சீனாவின் அதிபராக ஜி ஜின்பிங் இருக்கிறார். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் புதிய அரசாங்கம் பதவி ஏற்கும். இரண்டு முறை அதிபராக இருந்த யாரும் மீண்டும் சீனாவின் அதிபராக தேர்வு செய்யப்பட்டதில்லை. இந்த சட்டத்தை ஜின்பிங் மாற்றினார். அதன்படி, சீன வரலாற்றில் முதன்முறையாக மூன்றாவது முறையாக ஜின்பிங் அதிபராகியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in