“உக்ரைன் போரை 24 மணி நேரத்தில் தீர்த்திருப்பேன்” -ட்ரம்ப் சவடால்!

அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப்
அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப்Andrew Harnik

அமெரிக்க அதிபராக இருந்திருப்பின் 24 மணி நேரத்தில் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வந்திருப்பேன் என்று சவடால் விடுத்திருக்கிறார் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.

அமெரிக்க அதிபராக இருந்த ட்ரம்ப், இரண்டாவது இன்னிங்ஸ் ஆசையில் இரண்டாவது முறையாகவும் போட்டியிட்டார். ஆனால் ட்ரம்ப்புக்கு எதிரான அலை அமெரிக்காவில் நிலவியதில், ஜோ பைடன் வென்று அமெரிக்க அதிபரானார். ஆனபோதும், அடுத்து வரும் அதிபர் தேர்தலுக்கு வெள்ளோட்டமாய் இப்போதே அரசியலில் வேகம் காட்டி வருகிறார் ட்ரம்ப். அந்த வகையில் பைடனுக்கு எதிராகவும் குற்றச்சாட்டுகளையும் ட்ரம்ப் தொடர்ந்து வீசி வருகிறார்.

அவற்றில் ஒன்றாக ரஷ்யா - உக்ரைன் போரை அதிபர் ஜோ பைடன் எதிர்கொண்டு வருவதையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். அப்படி, “ நான் அதிபராக இருந்திருப்பின் ரஷ்யா - உக்ரைன் போரை 24 மணி நேரத்தில் முடிவுக்கு கொண்டு வந்திருப்பேன்” என்று ட்ரம்ப் சவடால் விடுத்திருப்பது தற்போது பரபரப்பாகி இருக்கிறது.

”உக்ரைன் போர் நிலவரத்தை வெள்ளை மாளிகை மிக மோசமாக கையாள்கிறது. ஆப்ராம்ஸ் டாங்கிகள் உட்பட அதிகளவிலான ஆயுதத் தளவாடங்களை உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கி வருகிறது. இவை ரஷ்யாவை சீண்டுவதாகவே அமையும். இந்த ஆயுத தளவாடங்களின் வரிசை கடைசியில் அணு ஆயுதங்களை வழங்குவதில் போய் முடியப் போகிறது” என்று எச்சரித்திருக்கிறார் ட்ரம்ப்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in