உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர்களின் பட்டியல் வெளியீடு: ஆச்சரியப்படுத்திய அதிரடி மன்னன்!

கில்கிறிஸ்ட்
கில்கிறிஸ்ட்

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடி கொண்டிருக்கும்போதே பல கோடிகளை சம்பாதித்து வந்த கிரிக்கெட் வீரர்கள் பலரும் உண்டு. அதே நேரத்தில் அவர்கள் ஓய்வுக்கு பிறகும் பல கோடிகளை சம்பாதித்து வருகின்றனர். அந்த வரிசையில் பல முன்னணி கிரிக்கெட் வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். இந்தியாவைப் பொருத்தவரை சச்சின் டெண்டுல்கர் உலக பணக்கார பட்டியலில் தொடர்ந்து இடம் பிடித்து வருகிறார். அது தற்போது வரை நீடித்து வடுத்து வருகிறது.

இந்நிலையில், உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் ஆஸ்திரேலிய முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கில்கிறிஸ்ட் முதலிடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலியா அணியில் அதிரடி ஆட்டக்காரராகவும் விக்கெட் கீப்பராகவும் வலம் வந்தவர் கில்கிறிஸ்ட். இவர் விளையாடும் போது பல விளம்பரங்களில் நடித்து கோடிகளை சம்பாதித்தவர். தற்போது ஓய்வுக்குப் பிறகு ரியல் எஸ்டேட் தொழிலில் கொடிகட்டி பறந்து வருகிறார்.

2-வது இடத்தை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பிடித்துள்ளார். அதே நேரத்தில் 3-வது இடத்தை விராட் கோலியும், 4-இடத்தையும் தோனியும், 5-வது இடத்தை சவுரவ் கங்குலியும் பிடித்துள்ளனர். ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 6-வது இடத்தையும், தென் ஆப்பிரிக்கா முன்னாள் வீரர் ஜேக் காலிஸ் 7-வது இடத்தையும், மேற்கிந்திய தீவு அணியின் முன்னாள் வீரர் பிரைன் லாரா 8-வது இடத்தையும், மறைந்த ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் ஷேன் வார்ன் 9-வது இடத்தையும், மேற்கிந்திய தீவின் அதிரடி ஆட்டக்காரர் கிரிஸ் கேல் 10-வது இடத்தையும் பிடித்துள்ளனர். அதே நேரத்தில் 11 இடத்தை இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக்கும். 13-வது இடத்தை யுவராஜ் சிங்கும், 16-வது இடத்தை ஜாகீர்கானும் பிடித்துள்ளனர்.

முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஓய்வுக்கு பிறகு பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். முக்கியமாக விளம்பரங்களில் அதிக அளவில் தோன்றி கோடிகளை குவித்து வருகின்றனர். இதில் முக்கியமானவர் சச்சின் டெண்டுல்கர். கங்குலி தற்போது பிசிசிஐ தலைவராக இருந்து வருகிறார். இவர் கொல்கத்தாவில் பல நிறுவனங்களை நடத்தி வருகிறார். விராட் கோலி தனது மனைவியுடன் விளம்பரங்களில் அதிக அளவில் கோடிகளை சம்பாதித்து வருகிறார். தோனியை சொல்லவே வேண்டாம். அந்த அளவுக்கு விளம்பரம் மூலம் கோடிகளை குவித்து வருகிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in