மகாராஷ்டிரா நெடுஞ்சாலையில் மூங்கிலால் விபத்து தடுப்பு வேலி: ‘உலகின் முதல் முயற்சி’ என நிதின் கட்கரி பெருமிதம்

மூங்கில் தடுப்பு வேலி
மூங்கில் தடுப்பு வேலிமகாராஷ்டிரா நெடுஞ்சாலையில் மூங்கிலால் விபத்து தடுப்பு வேலி: ‘உலகின் முதல் முயற்சி’ என நிதின் கட்கரி பெருமிதம்

மகாராஷ்டிராவின் சந்திராபூர் மற்றும் யவத்மால் மாவட்டங்களை இணைக்கும் நெடுஞ்சாலையில் 200 மீட்டர் நீளமுள்ள மூங்கில் விபத்து தடுப்பு வேலி நிறுவப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். இது "உலகின் முதல் முயற்சி” என்றும் அவர் கூறினார்.

மகாராஷ்டிராவில் அமைக்கப்பட்டுள்ள மூங்கில் விபத்து தடுப்பு வேலிகள் குறித்து மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டுள்ள ட்வீட்டில், "உலகில் முதன் முறையாக 200 மீட்டர் நீளமுள்ள மூங்கில் பேரியர், வாணி-வரோரா நெடுஞ்சாலையில் நிறுவப்பட்டுள்ளது. இந்த மூங்கில் விபத்து தடுப்பு வேலிக்கு "பஹு பல்லி" என பெயரிடப்பட்டுள்ளது. இது இந்தூரில் உள்ள பிதாம்பூரில் தேசிய வாகன சோதனை தடங்கள் (NATRAX) போன்ற அரசாங்கத்தால் நடத்தப்படும் பல்வேறு நிறுவனங்களில் கடுமையான சோதனைக்கு உட்பட்டது, மேலும் ரூர்க்கியில் உள்ள மத்திய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தில் (CBRI) நடத்தப்பட்ட தீ மதிப்பீடு சோதனையின் போது க்ளாஸ் 1 என மதிப்பிடப்பட்டது. கூடுதலாக, இது இந்திய சாலை காங்கிரஸால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது, மூங்கில் தடைகளின் மறுசுழற்சி மதிப்பு 50-70 சதவீதம் என்றும், ஆனால் எஃகு தடைகளின் மறுசுழற்சி மதிப்பு 30-50 சதவீதம்" என்று கூறினார்.

மேலும், "இந்த விபத்து தடுப்பு வேலியை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூங்கில் இனம் பாம்புசா பால்கோ ஆகும், இது கிரியோசோட் எண்ணெயுடன் பதப்படுத்தப்பட்டு, மறுசுழற்சி செய்யப்பட்ட உயர் அடர்த்தி பாலி எத்திலீநாள் பூசப்பட்டது. இந்த சாதனை மூங்கில் துறைக்கும் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் குறிப்பிடத்தக்க மைல்கல். இந்த விபத்து தடையானது எஃகுக்கு சரியான மாற்றை வழங்குகிறது மற்றும் சுற்றுச்சூழல் கவலைகள் மற்றும் அவற்றின் பின்விளைவுகளை நிவர்த்தி செய்கிறது. மேலும், இது கிராமப்புற மற்றும் விவசாயத்திற்கு ஏற்ற தொழில் ஆகும்" என்று கட்கரி கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in