உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்: இடது மணிக்கட்டில் காயத்துடன் வெள்ளி வென்று மீராபாய் சானு அசத்தல்

உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்: இடது மணிக்கட்டில் காயத்துடன்  வெள்ளி வென்று மீராபாய் சானு அசத்தல்

கொலம்பியாவில் நடைபெற்ற உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

கொலம்பியாவில் உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், பெண்களுக்கான 49 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு மொத்தம் 200 கிலோ எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

சீனாவின் ஒலிம்பிக் சாம்பியனான ஹூ ஜிஹுவாவை வீழ்த்தி மீரா பாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இந்த பிரிவில் மற்றொரு சீன வீரரான ஜியாங் ஹுய்ஹுவா, 206 கிலோ எடையைத் தூக்கி தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

உலக சாம்பியன்ஷிப் போட்டியில் மீராபாய் சானு பெற்ற இரண்டாவது பதக்கம் இதுவாகும். இதற்கு முன்பு 2017-ம் ஆண்டு நடந்த சாம்பியன்ஷிப் போட்டியில் 194 கிலோ எடையைத் தூக்கி தங்கம் வென்றார். மீராபாய் சானுவின் இடது மணிக்கட்டில் காயம் ஏற்பட்ட நிலையில் 200 கிலோ எடையை தூக்கி சாதனை படைத்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in