உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் வாகை சூடப்போவது யார்? - டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தது இந்தியா; பிளேயிங் 11 வீரர்கள் விவரம்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிவாகை சூடப்போவது யார்? - டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தது இந்தியா!

லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இன்று தொடங்கியது . இதில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

ஆஸ்திரேலியா - இந்திய அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று மதியம் 3 மணியளவில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்து வருகிறது.

இந்தப் போட்டியில் பிளேயிங் 11ல் இடம்பெற்றுள்ள வீரர்கள் விவரம்:

இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, கே.எஸ்.பரத், அஜிங்க்ய ரஹானே, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர், மொகமது ஷமி, மொகமது சிராஜ், உமேஷ் யாதவ்.

ஆஸ்திரேலியா: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், மார்னஷ் லபுஷேன், உஸ்மான் கவாஜா, டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன்,நேதன் யலன், அலெக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டார்க், ஸ்காட் போலண்ட்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்காக 2021 முதல் 2023-ம் ஆண்டு வரை இரண்டு ஆண்டுகள் போட்டிகள் நடைபெற்றன. இதில் 9 அணிகள் பங்கேற்று உள்ளூர்-வெளியூர் போட்டிகள் என்ற அடிப்படையில் மோதின. மொத்தம் நடைபெற்ற 27 தொடர்களில் 69 டெஸ்டுகள் நடத்தப்பட்டன. டெஸ்ட் வெற்றிக்கு 12 புள்ளிகளும், டிராவுக்கு 4 புள்ளிகளும் அணிகளுக்கு வழங்கப்பட்டன. இப்போட்டிகளின் முடிவில் புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா 66.67 சதவீத புள்ளிகளுடன் முதலிடத்தையும், இந்தியா 58.80 சதவீத புள்ளிகளுடன் 2-வது இடத்தையும் பிடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. 55.56 சதவீத புள்ளிகளுடன் தென்ஆப்பிரிக்கா அணி 3ம் இடத்தை பிடித்தது.

ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் சரிசம பலத்துடன் மல்லுக்கட்டுவதால் களத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. இவ்விரு அணிகள் இதுவரை 106 டெஸ்ட் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 32-ல் இந்தியாவும், 44-ல் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. 29 டெஸ்ட்கள் டிராவில் முடிந்தது. லண்டன் ஓவல் மைதானத்தில் இந்திய அணி 14 டெஸ்டுகளில் விளையாடி 2-ல் வெற்றியும், 5-ல் தோல்வியும், 7-ல் டிராவும் பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய அணி இங்கு 38 டெஸ்டுகளில் விளையாடி 7-ல் வெற்றியும், 17-ல் தோல்வியும், 14-ல் டிராவையும் சந்தித்துள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு சவுத்தம்டனில் நடந்த முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து கோப்பையை கைப்பற்றியது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in