சென்னையில் ஜூலை 4-ம் தேதி உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு!

சென்னையில் ஜூலை 4-ம் தேதி உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு!

சென்னையில் ஜூலை 4-ம் தேதி உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் எனத் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று கலந்து கொண்ட அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில் , “தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டுக் காலத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலமாக ஏறத்தாழ 94,975 கோடி ரூபாய் அளவில் தொழில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஓராண்டில் மட்டும் 132 தொழில் நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்திருக்கிறோம்.

இதன் காரணமாக 2.26 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த 132 ஒப்பந்தங்களில் 78 தொழில் திட்டங்கள் செயல்பாட்டு நிலையில், 29 திட்டங்களுக்கு நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. முதலீடுகளோடு மட்டும் நின்றுவிடாமல் தொழில் நிறுவனங்களோடு தொடர்ந்து கலந்துரையாடி பல்வேறு திட்டங்களை அவர்கள் தொடர்ச்சியாக நிறைவேற்றுவதற்கு நாங்கள் உரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். டேட்டா அனாலசிஸ், செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளிலும் உள்ள உயர் தொழில்நுட்ப சேவைகளுக்கு ஆதரவு வழங்க கூடிய நிலையில் தொழில்துறை தனது பங்களிப்பைச் செலுத்தி வருகிறது. இதன் வாயிலாக 96 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். இத்தகைய உயர் தொழில்நுட்ப நிலையங்கள் கோவை மற்றும் மதுரை மாவட்டங்களில் அமைய இருக்கின்றன.

ஜூலை 4-ம் தேதி நடைபெறும் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் இத்தகைய நிறுவனங்கள் சிலவற்றோடும் ஒப்பந்தம் செய்ய உள்ளோம். கடந்த ஓராண்டில் மட்டும் செமி கண்டெக்டர்கள், மின் வாகனங்கள், லித்தியம் பேட்டரிகள், சூரிய ஒளி மின்அழுத்திகள், பசுமை ஹைட்ரஜன் போன்ற துறைகளில் முதலீடு செய்துள்ளோம். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பை உருவாக்கும் நோக்கில் தகுதியும் திறமையும் உள்ள இளைஞர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும் ” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in