அர்ஜென்டினாவின் வெற்றிக்கு ஆர்ப்பரித்த கேரளா: பல இடங்களில் வன்முறை - ஏராளமானோர் கைது

அர்ஜென்டினாவின் வெற்றிக்கு ஆர்ப்பரித்த கேரளா: பல இடங்களில் வன்முறை - ஏராளமானோர் கைது

கத்தாரில் நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் பிரான்ஸை வீழ்த்தி அர்ஜென்டினா சாம்பியனானது. இந்த வெற்றியை கொண்டாடிய போது கேரளாவில் பல இடங்களில் வன்முறை வெடித்தது, இதில் பலர் கைது செய்யப்பட்டனர்.

அர்ஜென்டினா அணியின் வெற்றி கொண்டாட்டத்தின்போது, நேற்று இரவில் கேரளாவின் பல பகுதிகளில் வன்முறை வெடித்தது.

கேரளாவின் கண்ணூரில் அர்ஜென்டினா மற்றும் பிரேசில் ரசிகர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மூன்று பேர் கத்திக்குத்து காயங்களுக்கு உள்ளானதாகவும், இதில் ஒருவர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர். இந்த

சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

மற்றொரு சம்பவத்தில் கொச்சியின் கலூரில் குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படும் அர்ஜென்டினா ரசிகர்கள் பைக்கில் வெற்றி ஊர்வலம் வந்தபோது, அதனைக் கட்டுப்படுத்த முயன்ற மூன்று காவலர்கள் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களது வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

திருவனந்தபுரம், பொழியூரில் நடந்த வெற்றிக் கொண்டாட்டத்தை கட்டுப்படுத்த முயன்ற சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் காயமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கொல்லத்தில் வெற்றி கொண்டாட்டத்தின் போது 18 வயது இளைஞர் ஒருவர் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.

அர்ஜென்டினா வெற்றியைக் கொண்டாட பல பகுதிகளில், இலவச உணவு மற்றும் இனிப்புகளை வழங்கினர். திருச்சூரில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் 1,500 தட்டுகளில் இலவச சிக்கன் பிரியாணியை வழங்கினார். “கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸிக்கு இது ஒரு சிறிய பரிசு” என்று நெகிழ்ந்தார் ஹோட்டல் உரிமையாளர் பி ஷாஜி.

கோழிக்கோட்டில் பல இடங்களில் இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும் சில அல்வா இனிப்புகள் மூன்றில் ஒரு பங்கு விலையில் விற்பனை செய்யப்பட்டன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in