பெங்களூரு நீர் மேலாண்மை, வெள்ள தணிப்புக்கு ரூ.3 ஆயிரம் கோடி நிதியுதவி... வாரி வழங்கும் உலக வங்கி!

பெங்களூரு நீர் மேலாண்மை, வெள்ள தணிப்புக்கு ரூ.3 ஆயிரம் கோடி நிதியுதவி... வாரி வழங்கும் உலக வங்கி!

கர்நாடகா மாநிலம், பெங்களூரு நீர் மேலாண்மை, வெள்ள தணிப்பு பணிக்கு உலக வங்கி ரூ.3 ஆயிரம் கோடி நிதி உதவி அளிக்க உள்ளது.

கர்நாடகா மாநிலம், பெங்களூரு நீர் மேலாண்மை, வெள்ள தணிப்பு பணிக்கு ரூ.3 ஆயிரம் கோடி நிதி உதவி அளிக்க உலக வங்கியின் பொருளாதார விவகாரங்கள் துறை (டிஇஏ) பச்சைக்கொடி காட்டிவிட்ட நிலையில் 'ப்ருஹத் பெங்களூரு மகாநகராட்சி' (பிபிஎம்பி) நிர்வாகத்தினர், சமீபத்தில் உலக வங்கி பிரதிநிதிகளை சந்தித்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தனர்.

 'ப்ருஹத் பெங்களூரு மகாநகராட்சி' (பிபிஎம்பி)
'ப்ருஹத் பெங்களூரு மகாநகராட்சி' (பிபிஎம்பி)

ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவுடன்,பிபிஎம்பி, பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் (பிடபிள்யூஎஸ்எஸ்பி) கடன் தொகையை முறையே ரூ 2,000 கோடி, ரூ 1,000 கோடி வீதம் பகிர்ந்துகொள்ளப்பட உள்ளது.

இந்த கடன் தொகை மூலம், 173 கிமீ தொலைவுக்கு தடுப்பு சுவர்களைக் கட்டுவதன் மூலம் மழைநீர் வடிகால்களை வலுப்படுத்த பிபிஎம்பி திட்டமிட்டுள்ளது. இதேபோல் கோரமங்கள பள்ளத்தாக்கு நீர்வழி திட்டத்தை தட்சிண பினாகினி நதியுடன் இணைக்கும் பணியும் விரிவுபடுத்தப்பட உள்ளது.

மேலும், பிடபிள்யூஎஸ்எஸ்பி-க்கு ஒதுக்கப்படும் நிதியைப் பயன்படுத்தி புதிய நிலத்தடி வடிகால் அமைப்புகள் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை உருவாக்கும் பணியும் மேற்கொள்ளப்பட உள்ளது. பிடபிள்யூஎஸ்எஸ்பி கடந்த காலங்களில் உலக வங்கியின் நிதியை பல முறை பயன்படுத்தியிருந்தாலும், பிஎம்பிபி-க்கு இப்போதுதான் உலக வங்கி மூலம் முதல் முறையாக நிதி ஒதுக்கப்படுகிறது.

 பிடபிள்யூஎஸ்எஸ்பி
பிடபிள்யூஎஸ்எஸ்பி

இதற்கான விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) இம்மாத இறுதிக்குள் உலக வங்கியிடம் அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். பிபிஎம்பி, பிடபிள்யூஎஸ்எஸ்பி ஆகிய இரண்டு அமைப்புகள் தவிர, வெள்ளத்தைத் தணிப்பதற்காக உலக வங்கி கர்நாடகாவுக்கு ரூ.2,000 கோடி நிதியளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அம்மாநில வருவாய்த் துறை உலக வங்கி நிறுவனத்துடன் தொடர்பில் உள்ளது.

சமீப ஆண்டுகளில் பெங்களூருவில் திடீர் வெள்ளம் போன்ற பேரிடர்கள் அதிகரித்து, உயிர்களுக்கும் சொத்துகளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அறிவியல் கழக (ஐஐஎஸ்) ஆராய்ச்சியாளர்கள் பேராசிரியர் டி.வி. ராமச்சந்திரா, எஸ்.வினய், பாரத் எச்.ஐத்தல் ஆகியோர் சில ஆண்டுகளுக்கு முன் நடத்திய ஆய்வில் பெங்களூருவின் வெள்ளப் பிரச்சினைகளுக்கு பல காரணங்களை சுட்டிக்காட்டினர்.

உலக வங்கி
உலக வங்கி

மழைநீர் வடிகால்கள் சுருங்குதல், துண்டிக்கப்பட்ட ஏரிகள், பள்ளத்தாக்கு மண்டலங்களில் விதிமீறல்கள், ஏரிகள் அறிவிக்கையை நீக்கம் செய்தல் ஆகியவை இதில் அடங்கும். எனவே, உலக வங்கி நிதி உதவி மூலம் மேற்க்கண்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்து, பெங்களூரு மாநகரை வெள்ள அபாயத்திலிருந்து விடுவிப்பதே நோக்கமாக கொண்டு பணிகள் நடைபெற உள்ளன.

இதையும் வாசிக்கலாமே...

அதிர போகுது மதுரை... அரசியல் மாநாட்டிற்கு தேதி குறித்த விஜய்!

கோடை விடுமுறையில் சோகம்... ஏரியில் குளிக்கச் சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி!

ஹஜ் பயணிகளின் புனித பயணம் தொடங்கியது... டெல்லியில் இருந்து முதல் விமானம் புறப்பட்டது!

எஸ்எஸ்எல்சி மாணவர்களுக்கு குட்நியூஸ்ட்... பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு!

ரூ.90 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்... விமான நிலையத்தில் பரபரப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in