வெடித்து சிதறிய வெடிமருந்து; துண்டு துண்டான தொழிலாளியின் உடல்: கிணறு வெட்ட வாங்கிவைத்தபோது விபரீதம்

கிணறு வெட்ட வாங்கிவைத்த வெடிமருந்து வெடித்து தொழிலாளி மரணம்
கிணறு வெட்ட வாங்கிவைத்த வெடிமருந்து வெடித்து தொழிலாளி மரணம் வெடித்து சிதறிய வெடிமருந்து; துண்டு துண்டான தொழிலாளியின் உடல்: கிணறு வெட்ட வாங்கிவைத்தபோது விபரீதம்

திண்டுக்கல் மாவட்டத்தில் கிணறு வெட்டும் வேலைக்கு வந்த தொழிலாளி, கிணறு வெட்ட வாங்கிவைத்த வெடி பொருட்கள் வெடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், வடபருத்தியூர் கிராமத்தில் செல்லத்துரை என்பவர் தனது தோட்டத்தில் கிணறு வெட்டும் பணியை மேற்கொண்டார். இதற்காக அவரது தோட்டத்தில் திருப்பூரைச் சேர்ந்த மணிகண்டன்(33) என்பவரும் வேலை செய்துவந்தார். இதற்காக அங்கே தற்காலிக பந்தல் அமைத்து தொழிலாளர்கள் தங்கி இருந்தனர். இந்த நிலையில் கிணறு தோண்ட வேண்டிய பகுதியில் அதிகமான பாறைகள் இருந்ததால் கிணறு தோண்ட வசதியாக வெடிபொருட்கள் வாங்கி வைத்து இருந்தனர். இந்த வெடிபொருள்கள் தற்காலிக பந்தலில் வைக்கப்பட்டு இருந்தது. இங்கு இன்று மணிகண்டன் மட்டும் இருந்தார். அப்போது திடீரென வெடிபொருள்கள் வெடித்துச் சிதறியது.

இதில் மணிகண்டனின் உடல் துண்டு, துண்டாக சிதறியது. மேலும் அந்தத் தற்காலிக பந்தலும் தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஒட்டன்சத்திரம் தாசில்தார் முத்துச்சாமியும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார். மணிகண்டன் உடல் துண்டுகளாக சிதறியதால் அங்கேயே வைத்து பிரேதப் பரிசோதனை நடைபெற்றது. கிணறு தோண்ட வாங்கிவைத்த வெடிபொருள்கள் வெடித்துத் தொழிலாளி உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in