மகளிர் உரிமைத் திட்டம் சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்மகளிர் உரிமைத் திட்டம் சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

மகளிர் உரிமைத் திட்டம் சிலருக்கு எரிச்சலையும், பொறாமையையும் ஏற்படுத்தியுள்ளது என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னையில் இன்று நடந்த திருமண விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் மணமக்களை வாழ்த்திப் பேசினார். அப்போது அவர் பேசுகையில், “தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி நடக்கிறது. இது ஒரு கொள்கைக் குடும்பம். தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறோம். காலைச் சிற்றுண்டி, மகளிருக்கு இலவசப் பேருந்து, மகளிருக்கு உரிமைத் தொகை உள்ளிட்டவை உதாரணம்.

வரும் செப்.15-ம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் ஒரு கோடி மகளிர் பயன்பெறுவார்கள். இந்த திட்டம் சிலருக்கு எரிச்சலையும், சிலருக்கு பொறாமையையும் ஏற்படுத்தியுள்ளது. இதை விமர்சிப்பவர்களைப் பார்த்து நிறைய எதிர்கேள்வி கேட்கமுடியும்.

வெளிநாட்டில் உள்ள கருப்புப் பணத்தை மீட்டு ஒருவருக்கு 15 லட்சம் வழங்கலாம் என 2014 தேர்தலுக்கு முன்பு மோடி பேசினார். 15 ஆயிரமாவது தந்தார்களா? தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றையாவது பாஜக நிறைவேற்றி உள்ளதா? இந்திய நாட்டிற்கு இன்று ஆபத்து வந்துள்ளது. அதைக் காக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. ஆட்சிக்கு ஆபத்து வந்தாலும் நாம் கவலைப்பட வேண்டாம். கடுகளவும் பயப்படாமல் கொள்கை, லட்சியத்தை மனதில் வைத்துக்கொண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும்.

யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதைவிட யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் கவனம் தேவை. நாட்டிற்கு நல்லதை ஏற்படுத்தித் தரவேண்டும் என்னும் நோக்கத்தில் எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்து உள்ளன ”என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in