இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா
இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா மகளிர் பிரீமியர் லீக் போட்டி; அதிக ஏலம் போன இந்திய வீராங்கனை யார்: மற்றவர்களின் நிலை என்ன?

மகளிர் பிரீமியர் லீக் போட்டி; அதிக ஏலம் போன இந்திய வீராங்கனை யார்: மற்றவர்களின் நிலை என்ன?

மகளிர் பிரீமியர் லீக் போட்டிகளுக்கான ஏலத்தில் இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா 3.4 கோடிக்கு ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் முதன்முறையாக நடைபெற உள்ள மகளிர் பிரீமியர் லீக்கில் பங்கேற்க உள்ள, வீராங்கனைகளுக்கான ஏலம் மும்பையில் இன்று நடைபெற்றது. வரும் மார்ச் 4-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை இந்த தொடர் நடைபெற உள்ளது. அறிமுக தொடரில் மொத்தம் 22 போட்டிகள் நடைபெறும் எனவும், பர்போர்ன் மற்றும் டி.ஓய். பட்டேல் மைதானத்தில் போட்டிகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற ஏலத்தில், இந்திய மகளிர் டி20 உலகக் கோப்பை அணியின் கேப்டன் சபாலி வர்மா, டெல்லி அணிக்காக 2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். இந்திய ஆல் ரவுண்டர் தீப்தி ஷர்மாவை உபி வாரியர்ஸ் அணி 2.6 கோடிக்கும், இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக 3 கோடியே 40 லட்சத்திற்கும் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர்.

மேலும், ஹர்மன்ப்ரீத் கவுரை 1.8 கோடிக்கு மும்பை அணியும், நியூசிலாந்து வீராங்கனை சோஃபி டிவைன் 50 லட்சத்திற்குப் பெங்களூரு அணியும், ஆஸ்திரேலியா வீராங்கனை ஆஷ்லே கார்ட்னர் 3.2 கோடிக்குகுஜராத் ஜெயண்ட்ஸ் அணியும், ஆஸ்திரேலியா எலிஸ் பெர்ரி 1.7 கோடிக்கு பெங்களூரு அணியும், இங்கிலாந்து வீராங்கனை சோஃபி எக்லெஸ்டோனை 1.8 கோடிக்கு உ.பி. வாரியர்ஸ் அணியும், தீப்தி ஷர்மாவை 2.6 கோடிக்கு உ.பி. வாரியர்ஸ் அணியும், ரேணுகா சிங்கை 1.5 கோடிக்கு பெங்களூரு அணியும் ஏலம் எடுத்தன.

அத்துடன், இங்கிலாந்து வீராங்கனை நடாலி சைவ்ரை 3.2 கோடிக்கு மும்பை அணியும், ஆஸ்திரேலியா வீராங்கனை தஹ்லியா மெக்ராத்தை 1.4 கோடிக்கு உபி வாரியர்ஸ் அணியும், ஆஸ்திரேலியா வீராங்கனை பெத் மூனியை 2 கோடிக்கு குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும், தென் ஆப்பிரிக்கா வீராங்கனை ஷப்னிம் இஸ்மாயிலை 1 கோடிக்கு உபி வாரியர்ஸ் அணியும், நியூசிலாந்து வீராங்கனை அமெலியா கெரை 1 கோடிக்கு மும்பை அணியும், இங்கிலாந்து வீராங்கனை சோபியா டன்க்லி 60 லட்சத்திற்கு குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும், ஜெமிமா ரோட்ரிக்ஸை 2.2 கோடிக்கும், ஆஸ்திரேலியா வீராங்கனை மெக் லானிங்கை 1.1 கோடிக்கும், ஷஃபாலி வர்மாவை 2 கோடிக்கும் டெல்லி அணி ஏலம் எடுத்தன.

ஆஸ்திரேலியா வீராங்கனை அன்னாபெல் சதர்லேண்ட் 70 லட்சத்திற்கு குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும், பூஜா வஸ்த்ரகரை 1.9 கோடிக்கு மும்பை அணியும், ஹர்லீன் தியோலை 40 லட்சத்திற்கும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும், மேற்கிந்திய வீராங்கனை டியான்ட்ரா டாட்டின் 50 லட்சத்திற்கு குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும், யாஸ்திகா பாட்டியாவை 1.5 கோடிக்கு மும்பை அணியும், ரிச்சா கோஷை 1.9 கோடி பெங்களூரு அணியும், ஆஸ்திரேலியா வீராங்கனை அலிசா ஹீலியை 70 லட்சத்துக்கு உ.பி. வாரியர்ஸ் அணியும், அஞ்சலி சர்வானியை 55 லட்சத்திற்கும், ராஜேஸ்வரி கயக்வாட்டை 40 லட்சத்திற்கும் உபி வாரியர்ஸ் ஏலம் எடுத்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in