டிஜிபி சைலேந்திரபாபு
டிஜிபி சைலேந்திரபாபு தமிழகத்தில் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரிப்பு: பெண்களை எச்சரிக்கும் டிஜிபி

தமிழகத்தில் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரிப்பு: பெண்களை எச்சரிக்கும் டிஜிபி

தமிழகம் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக திகழ்ந்தாலும், சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்திருப்பதால் பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு கேட்டுக் கொண்டுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு பங்கேற்று மாணவர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கினார். பின்னர் மாணவர்கள் மத்தியில் அவர் பேசுகையில், ‘’புத்தகம் மற்றும் பேனா மாணவர்களின் மிகப்பெரிய ஆயுதம். அதனைச் சரியாக பயன்படுத்த வேண்டும். பெண்கள் படிப்பை சுயமாக தேர்வு செய்ய வேண்டும்.

சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆய்வு செய்த போது அவை பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான மாவட்டங்களாக உள்ளன. தமிழ் நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிராக 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வன்கொடுமைச் சட்டத்தின் கீழ்14,480 வழக்குகளும், பாலியல் புகார் தொடர்பாக 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் 242 பெண் காவல் நிலையங்கள் உள்ளன. இதில் பெண் காவலர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். பெண்களுக்கு எதிரான சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்திருப்பதால், பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in