நள்ளிரவில் வீடு புகுந்து திருடப்பட்ட 6 மாத குழந்தை: சிக்கிய பெண்கள் அதிர்ச்சி வாக்குமூலம்

நள்ளிரவில் வீடு புகுந்து திருடப்பட்ட 6 மாத குழந்தை: சிக்கிய பெண்கள் அதிர்ச்சி வாக்குமூலம்

திருநெல்வேலியில் பண ஆசையில் 6 மாத பெண் குழந்தையைக் கடத்திய இருபெண்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி மாவட்டம், கீழபாப்பாக்குடி காட்டுநாயக்கன் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக்(22). இவரது மனைவி இசக்கியம்மாள்(20). இந்தத் தம்பதிக்கு பிரியங்கா என்னும் ஆறுமாதக் குழந்தை உள்ளது. கார்த்திக் கேரளத்தில் வேலை செய்து வருகிறார். இடை, இடையே ஊருக்கு வந்து செல்வது வழக்கம். அப்படி வந்திருந்தவர் நேற்று இரவு குடும்பத்தோடு தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் தண்ணீர் குடிக்க எழுந்த போது தன் 6 மாதக் குழந்தை பிரியங்கா மாயமாகி இருப்பது தெரியவந்தது. ஆறுமாதக் குழந்தை என்பதால் யாரோ, வீடு புகுந்து தூக்கிச் சென்றிருக்கிறார்கள் என்று கணித்த கார்த்திக் இதுதொடர்பாக பாப்பாக்குடி போலீஸில் புகார் கொடுத்தார்.

அம்பாசமுத்திரம், டி.எஸ்.பி பிரான்சிஸ் மேற்பார்வையில் மாயமான குழந்தையைக் கண்டுபிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டது. இதில் கார்த்திக்கின் வீடு இருக்கும் அதே தெருவைச் சேர்ந்த கனி(40), செல்வி(35) ஆகியோர் தான் குழந்தையைத் திருடியது தெரியவந்தது. இருவரிடமும் தொடர்ந்து நடத்திய விசாரணையில், ‘ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த இவர்களின் உறவினர் ஒருவர், மதுரையில் உள்ள தனது உறவினருக்குக் குழந்தை இல்லை எனவும், எங்கிருந்தாவது ஒரு குழந்தையைக் கொண்டுவரச் சொன்னதால் ஆலங்குளம் வாலிபருக்கு குழந்தையை விற்றுவிட்டதாகத் தெரிவித்தனர். இதனிடையே குழந்தை மதுரைக்கே சென்றுவிட்டது தெரியவந்தது. பாப்பாக்குடி போலீஸார் மதுரைக்கு விரைந்து குழந்தையை மீட்டு அழைத்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in