20 பவுன் நகைக்காக பெண் கொடூரக் கொலை: தனியாக இருந்தபோது நடந்த விபரீதம்

20 பவுன் நகைக்காக பெண் கொடூரக் கொலை: தனியாக இருந்தபோது நடந்த விபரீதம்

வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் கழுத்தை அறுத்துக்கொன்ற கும்பல், 20 பவுன் நகைகளுடன் தப்பி ஓடிய சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கோவை மாவட்டம், சிறுமுகை அருகே உள்ள ஜடையம்பாளையம் புதூர் கிராமத்தில் வீட்டில் தனியாக வசித்து வந்தவர் சரோஜா. இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் நேற்று இரவு சரோஜா வீட்டிற்குள் புகுந்துள்ளது. அப்போது, தனியாக இருந்த சரோஜாவை கழுத்து அறுத்து கொலை செய்த கும்பல், வீட்டிலிருந்த 20 பவுன் நகையை கொள்ளை அடித்துவிட்டு தப்பியது. இது குறித்த தகவலின் பெயரில் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சரோஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவல்துறை நடத்திய முதல் கட்ட விசாரணையில் நகைக்காக சரோஜா கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் கொலையாளிகளை தேடி வருகின்றனர். வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் கோவை மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in