பஸ்நிலையத்தில் படுத்து உறங்கியவர் மீது பெண் காவலர் கொடூரத் தாக்குதல்: திருச்சியில் அதிர்ச்சி

தாக்கும் பெண் போலீஸ்
தாக்கும் பெண் போலீஸ்பஸ்நிலையத்தில் படுத்து உறங்கியவர் மீது பெண் காவலர் கொடூரத் தாக்குதல்: திருச்சியில் அதிர்ச்சி

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் படுத்து உறங்கிய பெண்ணை இரவு நேர பணியில் இருந்த பெண் காவலர் லத்தியால் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து கடலூர், விருத்தாசலம், அரியலூர், பெரம்பலூர், கரூர் உள்ளிட்ட வெளியூர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அத்துடன் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பகுதிகளுக்கும் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதன் காரணமாக சத்திரம் பேருந்து நிலையத்திற்கு தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். வெளியூர் செல்ல வரும் பயணிகள் பேருந்து நடைமேடையில் பேருந்துக்காக காத்திருப்பது வழக்கம். பேருந்தை தவற விடுபவர்களும், யாசகர்களும் இரவு நேரத்தில் சத்திரம் பேருந்து நிலைய நடைமேடையில் படுத்து உறங்குவது வழக்கம்.

அப்படி நேற்று இரவு படுத்து உறங்கிய ஒரு பெண்ணை இரவு நேரப் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் ஒருவர் லத்தியால் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண் யார், எதற்காகத் தாக்கப்பட்டார் என்ற விவரம் தெரியவில்லை. ஆனால், படுத்து உறங்கும் பெண்ணை என்ன காரணம் என விசாரிக்காமல் தாக்கக்கூடாது என பெண் காவலருக்கு அங்கிருந்த பயணிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் காட்சிகளும் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளன.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் நடந்த இந்த தாக்குதல் சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in