`12 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் 5 லட்சம் நிதி வழங்குகிறேன்'- அரசு அதிகாரியை சிக்கிவைத்த சுய உதவி குழு தலைவி

மல்லிகா
மல்லிகா

மகளிர் சுய உதவி குழுவினரின் தாட்கோ நிதியை விடுவிக்க லஞ்சம் கேட்ட வட்டார இயக்க மேலாளரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கையும் களவுமாக கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இயங்கி வரும் ஊரக வாழ்வாதார இயக்கத்தின், வட்டார இயக்க மேலாண்மை அலகில் வட்டார இயக்க மேலாளராக பணி புரிபவர் மல்லிகா. இவர் மீது லஞ்சம் பெறுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் இருந்து வந்தன. இந்நிலையில் கண்ணுடையாம்பட்டியில் உள்ள மலர் சுய உதவிக் குழுவிற்கு தாட்கோ மூலம் ஐந்து லட்சம் நிதி வழங்கப்பட்டது. அதனை விடுவிக்க வட்டார இயக்க மேலாளர் மல்லிகா 12 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

லஞ்சம் கொடுக்க விரும்பாத குழு தலைவி ராஜலெட்சுமி, லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் அளித்தார். புகாரின்பேரில் இன்று நிகழ்விடத்துக்கு சென்ற டி.எஸ்.பி மணிகண்டன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீஸார் அங்கு மறைந்து நின்று கொண்டனர். அவர்கள் கொடுத்த ரசாயனம் தடவிய லஞ்சம் பணம் 12 ஆயிரத்தை ராஜலெட்சுமி, வட்டார இயக்க மேலாளர் மல்லிகாவிடம் கொடுத்தபோது மறைந்திருந்த போலீஸார் கையும் களவுமாக பிடித்தனர். மல்லிகாவிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in