தாம்பத்தியத்துக்கு வர மறுப்பு; மனைவியை கழுத்தை அறுத்துக்கொன்ற கணவன்: அரியலூரில் பயங்கரம்

தாம்பத்தியத்துக்கு வர மறுப்பு; மனைவியை கழுத்தை அறுத்துக்கொன்ற கணவன்: அரியலூரில் பயங்கரம்

அரியலூர் மாவட்டத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக  இறைச்சியை அறுப்பது போல மனைவியை கழுத்தை அறுத்து இறைச்சிக் கடைக்காரர் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தைச் சேர்ந்தவர்  ஜியாபர்(50). இவர் அப்பகுதியில் ஆட்டு இறைச்சிக் கடை வைத்துள்ளார். அவரது மனைவி ரியாஜ்பி(42). இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம் என்று சொல்லப்படுகிறது.  இந்நிலையில் நேற்று இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்த ஜியாபர்  மனைவியை தாம்பத்தியத்துக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. அதற்கு ரியாஜ்பி மறுத்திருக்கிறார்.

இதனால்  கணவன்- மனைவி இருவருக்கும் இடையே மீண்டும்  தகராறு ஏற்பட்டது. அதன் காரணமாக ஆத்திரம் அடைந்த ஜியாபர், மனைவி ரியாஜ்பியின் கழுத்தை இறைச்சி வெட்டும் கத்தியால்  அறுத்து கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து வந்த  உடையார் பாளையம் போலீஸார் ரத்த வெள்ளத்தில் கிடந்த ரியாஜ்பியின் உடலை மீட்டு  பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார் ஜியாபரை கைது செய்துள்ளனர்.

ஆடு அறுக்கும் கத்தியால் மனைவியை அவரது கணவர்  கழுத்தை அறுத்து கொலை செய்திருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in