சாத்தூர் வெடி விபத்தில் தரைமட்டமான 8 அறைகள்; பெண் தொழிலாளி பலி: 6 பேருக்கு தீவிர சிகிச்சை

சாத்தூர் வெடி விபத்தில் தரைமட்டமான 8 அறைகள்; பெண் தொழிலாளி பலி: 6 பேருக்கு தீவிர சிகிச்சை

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் பெண் தொழிலாளி பலியானார். இச்சம்பவத்தில் 6 பேர் படுகாயமடைந்தனர்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே கனஞ்சாம்பட்டியில் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்குள்ள 50க்கும் மேற்பட்ட அறைகளில் 75க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தினமும் பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மூலப்பொருள் உராய்வால் இன்று ஏற்பட்ட வெடிவிபத்தில், 75 அறைகளில் 8 அறைகள் முற்றிலும் தரைமட்டமானது. தகவலறிந்த தீயணைப்பு துறையினர், போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர். தண்ணீர் பீச்சியடித்து போதிலும் பட்டாசுகள் தொடர்ந்து வெடித்தன.

இதில் சத்திரப்பட்டியைச் சேர்ந்த முனீஸ்வரி (50) பலியாயினர். மேலும் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த 6 பேரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். இவர்களுக்கு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in