மின்னல் தாக்கி சுருண்டு விழுந்து பெண் பலி: ஆடு மேய்க்க சென்றபோது நடந்த துயரம்!

மழை
மழைhindu கோப்பு படம்

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. மழை நேரத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண் மின்னல் தாக்கி பரிதாபமாக உயிர் இழந்தார்.

தென்மாவட்டங்களில் பல பகுதிகளிலும் தினசரி மாலையில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. தூத்துக்குடி, சாத்தான்குளம், கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நல்லமழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகபட்சமாக சாத்தான்குளத்தில் 72.6 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. நெல்லை மாவட்டத்திலும் சேரன்மகாதேவி உள்பட பல்வேறு பகுதிகளிலும் நல்லமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், நடுவக்குறிச்சி அருகில் உள்ள வாகைகுளத்தை சேர்ந்த சிவசங்கரன் என்பவரின் மனைவி சுப்புலெட்சுமி(55) என்பவர் முறப்பநாடு அருகே செனல்பட்டு பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது மின்னல் சுப்புலெட்சுமி மீது தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே சுப்புலெட்சுமி சுருண்டு விழுந்து உயிரிழந்தனர். போலீஸார் சுப்புலெட்சுமி உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in