திருடனுக்கு பயந்து பீரோவுக்கு மின் இணைப்பு: மூதாட்டியின் செயலால் நடந்த விபரீதம்

அன்பழகி
அன்பழகி

பீரோவை திருடர்களிடமிருந்து பாதுகாக்க அதில் மின்சார இணைப்பு கொடுத்து வைத்திருந்த பெண், தவறுதலாக அந்த மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த பரிதாபம் சீர்காழியில் நடந்திருக்கிறது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே ஈசானியத் தெருவை சேர்ந்தவர் அன்பழகி(68). இவர் சீர்காழி நகராட்சியில் தூய்மைப் பணியாளராக வேலை பார்த்து வருகிறார், அன்பழகி கணவர் உயிரிழந்த நிலையில் மகன்கள், மகள்கள் என யாரும் இல்லாததால் தனியாக வசித்து வந்தார். தான் சேமித்து வைத்திருக்கும் பணம் நகை உள்ளிட்டவற்றை ஒரு பீரோ வாங்கி அதில் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்.

அதை திருடர்கள் யாரும் வந்து திருடிச் சென்று விட்டால் என்ன செய்வது என்று பயந்து அந்த பீரோவுக்கு மின்சார இணைப்பு கொடுத்து வைத்திருக்கிறார். தான் வீட்டில் இல்லாதபோதும், இரவிலும் அதற்கு மின் இணைப்பு கொடுத்து வைத்து விடுவார். வீட்டிற்கு வந்ததும், அல்லது விடிந்ததும் மறக்காமல் மின் இணைப்பை துண்டித்து விடுவாராம்.

இந்நிலையில் இன்று காலை எழுந்த அன்பழகி மின் இணைப்பை நிறுத்த மறந்துவிட்டார். வீட்டு வாசலில் கோலமிட்டு வந்தவர், பின்னர் பீரோவுக்கு அடியில் கோலமாவை வைத்துள்ளார். அப்போது அவரை மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் சீர்காழி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பெயரில் அங்கு வந்த சீர்காழி காவல் நிலைய காவலர்கள் அவரது உடலை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருடனுக்கு பயந்து மின்சாரம் வைத்த மூதாட்டி மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் சீர்காழியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in