திருமணத்திற்கு மறுத்த இளம்பெண் கொலை! காதலன் வெறிச்செயல்!

செல்போன் கேபிள்
செல்போன் கேபிள்

திருமணம் செய்ய மறுத்த காரணத்தால் இளம்பெண்ணை செல்போன் கேபிளால் கழுத்தை நெரித்துக் கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், மைன்புரி மாவட்டம், பதேபூர் படோஹி கிராமத்தைச் சேர்ந்தவர் பதன்சிங். இவரது மகள் கல்பனா(19) ஜூலை 26 அன்று காலை அவரது வீட்டின் வராண்டாவில் இறந்து கிடந்தார். அவரது கழுத்தில் கயிறு இறுக்கியதற்கான அடையாளங்கள் இருந்தன.

இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கல்பனாவிற்கும், அஜய் சௌஹான் என்ற வாலிபருக்கும் கடந்த 7 மாதங்களாக தொடர்பு இருந்து வந்துள்ளது தெரிய வந்தது. அவர்கள் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். ஆனால், கல்பனாவின் வீட்டில் வேறு மாப்பிள்ளைப் பார்த்துள்ளனர்.

இந்நிலையில், வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்து கொள்ளலாம் என கல்பனாவை அஜய் அழைத்துள்ளார். ஆனால், அவர் வரமறுத்துள்ளார். இதனால் கல்பனா மீது அஜய்க்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. எனவே, அஜய் தான் கொலை செய்திருக்கலாம் என கல்பனாவின் குடும்பத்தினர் போலீஸில் புகார் செய்தனர். ஆனால், அதற்கான ஆதாரம் போலீஸாருக்கு சிக்கவில்லை.

இந்நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் கல்பனா செல்போன் சார்ஜ் போடும் கேபிளால் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து கொலை செய்யப்பட்ட கல்பனாவின் செல்போனை போலீஸார் தேடிய போது அது காணாமல் போனது தெரிய வந்தது. எனவே, அந்த செல்போனுக்கு வந்த அழைப்பை அவர்கள் சோதனை செய்தனர். அப்போது ஜூலை 26 -ம் தேதி வரை கல்பனாவுடன் அஜய் சௌஹான் செல்போனில் பேசியது தெரிய வந்தது.

இதையடுத்து அவரை போலீஸார் நேற்று பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, கல்பனாவை கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார். போலீஸாரின் விசாரணையில், ‘எனக்குக் கிடைக்காத கல்பனா, யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று முடிவு செய்ததால் ஜூலை 26 -ம் தேதி அவருக்கு போன் செய்து வெளியே வரச்சொன்னேன். வீட்டு வரண்டாவில் அவரது செல்போன் சார்ஜ் போடும் கேபிள் இருந்தது. அதைக் கொண்டு கல்பனாவை கழுத்தை நெரித்துக் கொலை செய்தேன். அத்துடன் அவருடைய செல்போனையும் எடுத்துச் சென்று விட்டேன்’ என்று அஜய் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து போலீஸார் அவரை கைது செய்தனர்.

திருமணத்திற்கு மறுத்த இளம்பெண்ணை கழுத்தை நெரித்து வாலிபர் கொலை செய்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in