36 ஆண்டுகளாக கை, கால்களில் விலங்கிட்டு வீட்டுச் சிறை: மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் பெண் மீட்பு

36  ஆண்டுகளாக கை, கால்களில் விலங்கிட்டு வீட்டுச் சிறை: மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் பெண் மீட்பு

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 36 ஆண்டுகளாக கை,கால்களில் விலங்கிடப்பட்டு வீட்டுச்சிறையில் அறையில் அடைக்கப்பட்ட பெண் மீட்கப்பட்டு மனநல மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பிரோசாபாத் மாவட்டத்தில் முகமதாபாத் கிராமத்தைச் சேர்ந்தவர் கிரீஸ் சந்த். இவருக்கு ஸ்வப்னா ஜெயின் என்ற மகள் உள்ளார். இவரை 17 வயது முதல் ஒரு இருட்டை அறையில் கை, கால்களில் விலங்கு போட்டு கிரீஸ் சந்த் அடைத்து வைத்திருந்தார். கதவு இடுக்கு வழியே தான் அந்த பெண்ணுக்கு உணவு வழங்கப்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக அந்த பெண் கடுமையாக மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் கிரீஸ் சந்த் உயிரிழந்தார். இந்த நிலையில், இருட்டையில் பெண் அடைத்து வைக்கப்பட்ட விவரம் அறிந்த சேவா பாரதி அமைப்பைச் சேர்ந்தவர்கள், அந்த தொகுதி பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் அஞ்சலா மாகவூரிடம் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அஞ்சலா மாகவூர் முன் முயற்சியால் காவல் துறை உதவியோடு 36 ஆண்டுகளாக அறையில் அடைத்து வைக்கப்பட்ட பெண் மீட்கப்பட்டார். இதையடுத்து அவர் ஆக்ராவில் உள்ள மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சில வாரங்களில் அவரது உடல்நிலை சரியாக விடும் என்று மருத்துவர்கள் கூறினர். 36 ஆண்டுகளாக பெண் வீட்டில் அடைத்து வைக்கப்பட்ட சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in