திடீரென பிரேக் அடித்த டிரைவர்; பேருந்திலிருந்து குழந்தையுடன் கீழே விழுந்த பெண்: பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி

திடீரென பிரேக் அடித்த டிரைவர்; பேருந்திலிருந்து குழந்தையுடன் கீழே விழுந்த பெண்: பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி

பண்ருட்டியில் வேகமாக வந்த தனியார் பேருந்தை டிரைவர் திடீரென பிரேக் அடித்து நிறுத்தியதால் உள்ளே இருந்த பெண் தனது குழந்தையுடன் கீழே விழுந்தார். இந்த சிசிடிவி காட்சி வெளியாகி பதை பதைக்க வைத்துள்ளது.

கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் இருந்து விழுப்புரம், நெல்லிகுப்பத்திற்கு தனியார் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பயணிகளை அதிகமாக ஏற்றும் போட்டியில் தனியார் பேருந்துகள் ஈடுபட்டு வருகின்றன. இதனால் பல விபத்துகளும் நடப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே, பண்ருட்டியில் இருந்து தனியார் பேருந்து ஒன்று கடலூருக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது கண்டக்டர் திடீரென விசில் அடித்ததால் பேருந்து ஓட்டுநர் பிரேக் பிடித்து வண்டியை நிறுத்தினார்.

அப்போது பேருந்துக்குள் இருந்த பெண் தனது குழந்தையுடன் கீழே விழுந்தார். இதை கவனிக்காத டிரைவர் பேருந்தை எடுக்க முயன்றார். நல்வாய்ப்பாக கீழே விழுந்த பெண், குழந்தை இலேசான காயத்துடன் தப்பியது. இதை பார்த்து அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து ஓடி வந்த கீழே விழுந்து கிடந்த குழந்தையும் பெண்ணையும் தூக்கிவிட்டனர். அங்கிருந்த பொதுமக்கள் சிலர் ஆவேசமடைந்து கண்டக்டரை தாக்க முற்பட்டனர். இதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பேருந்தில் இருந்து பெண் ஒருவர் குழந்தையுடன் கீழே விழும் சிசிடிவி காட்சி இன்று வெளியாகி அனைவரையும் பதை பதைக்க வைத்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in