டிரைவர் விரட்டியடிப்பு; ஓடும் காரில் பெண் கூட்டு பலாத்காரம்: சென்னையில் நடந்த பயங்கரம்

டிரைவர் விரட்டியடிப்பு; ஓடும் காரில் பெண் கூட்டு பலாத்காரம்: சென்னையில் நடந்த பயங்கரம்

காரில் சென்ற பெண்ணை கத்தி முனையில் கடத்திச் சென்ற கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

சென்னை போரூரை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் நேற்று முன்தினம் இரவு காரில் சென்று கொண்டிருந்தார். ஐயப்பன்தாங்கல் அருகே கார் சென்று கொண்டிருந்தபோது கும்பல் ஒன்று வழிமறித்துள்ளது. அப்போது, காரை நிறுத்திய டிரைவரை அந்த கும்பல் சரமாரியாக தாக்கி விரட்டி அடித்துள்ளது. பின்னர் அந்தப் பெண்ணை கும்பல் காரில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. இதைத் தொடர்ந்த அந்தப் பெண்ணிடம் இருந்த 8 பவுன் நகைகளை பறித்துக் கொண்டு கும்பல் தப்பிச் சென்றது.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் போரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். மேலும், சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது பெண்ணை கடத்திச் சென்றது உறுதியானது. இதையடுத்து, அந்த கும்பலை சேர்ந்த 4 பேரை காவல்துறையினர் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னையில் பெண் கடத்தப்பட்டு ஓடும் காரிலேயே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in