நள்ளிரவில் ஓட்டு வீட்டின் மீது இடிந்து விழுந்த மாடி வீடு; பெண் பரிதாபமாக உயிரிழப்பு: இருவர் படுகாயம்

நள்ளிரவில் ஓட்டு வீட்டின் மீது  இடிந்து விழுந்த  மாடி வீடு; பெண் பரிதாபமாக உயிரிழப்பு:  இருவர் படுகாயம்

சென்னையில் புயல் காரணமாக புதிதாக கட்டும் வீட்டின் சுவர் இடிந்து பக்கத்து வீட்டில் விழுந்ததில் பெண் பலியானார். அவரது கணவர், குழந்தை படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை ஆலந்தூர் சாலை நெருப்பு மேடு பகுதியைச் சேர்ந்தவர் கேசவவேல்(42). சைக்கிள் கடையில் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், மூன்றரை வயதில் கிருத்திகா மற்றும் 6 மாதக்குழந்தையும் இருந்தனர். கேசவவேல் வீட்டின் அருகிலேயே தினகரன் என்பவர் இரண்டு மாடி கட்டிடம் கட்டி வருகிறார்.

இந்த நிலையில் மேன்டூஸ் புயல் காரணமாக நேற்றிரவு காற்றுடன் கனமழை பெய்ததால், புதிதாக கட்டி வரும் மாடி வீட்டு சுவர் சரிந்து கேசவவேல் ஓட்டு வீட்டின் மீது விழுந்தது. அப்போது வீட்டில் தூங்கி கொண்டிருந்த கேசவவேல், லட்சுமி, சிறுமி கிருத்திகா ஆகியோர் மீது சுவர் இடிந்து விழுந்தது. இதில் மூவரும் படுகாயமடைந்தனர். உடனே அருகிலிருந்த பொதுமக்கள் படுகாயமடைந்த கேசவவேல், லட்சுமியை மீட்டு சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கும், குழந்தை கிருத்திகாவை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லட்சுமி சற்றுமுன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கேசவவேல், அவரது குழந்தை கிருத்திகா ஆகிய இருவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக சைதாப்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து வீட்டு உரிமையாளர் தினகரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in