இறங்குவதற்கு முன் பேருந்தை எடுத்த ஓட்டுநர்; பறிபோன பெண்ணின் உயிர்: காய்கறி வாங்கிவிட்டு திரும்பியபோது சாேகம்

விபத்து
விபத்து

கன்னியாகுமரி மாவட்டம், தலக்குளம் பகுதியில் மினி பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண் பரிதாபமாக உயிர் இழந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம், தலக்குளம் குலாலர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவர் இறந்துவிட்டார். இதனால் இவரது மனைவி லலிதா(60) வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவர் திங்கள்நகர் பகுதியில் காய்கறி வாங்கச் சென்றார். காய்கறி வாங்கிவிட்டு மினி பேருந்தில் ஊருக்கு வந்தார். தலக்குளம் பகுதியில் லலிதா இறங்கிக் கொண்டு இருக்கும்போதே மினி பேருந்து ஓட்டுநர் பெத்தேல்புரம் பகுதியைச் சேர்ந்த சுனில் மரியதாஸ்(34) பேருந்தை இயக்கினார். இதில் நிலை தடுமாறி லலிதா கீழே விழுந்தார்.

இதில் லலிதாவின் கால்மீது பேருந்து ஏறி இறங்கியது. அவர் மயங்கினார். அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இரணியல் போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிந்து, தலைமறைவாக இருக்கும் மினி பேருந்து ஓட்டுநர் சுனில் மரியதாஸைத் தேடி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in