மாடு குறுக்கே பாய்ந்ததால் 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்: கணவன் கண் முன் மனைவி பலி

மாடு குறுக்கே பாய்ந்ததால் 10 அடி  பள்ளத்தில் கவிழ்ந்த கார்: கணவன் கண் முன் மனைவி பலி

செங்கோட்டை அருகே மாடு குறுக்கே பாய்ந்ததால் கார் 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காரில் இருந்த பெண் பலியானார்.

தென்காசி மாவட்டம். செங்கோட்டை அருகே உள்ள அச்சன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து பாண்டியன். இவரது மனைவி ஆனந்த செல்வி. இவர்களது மகளின் கணவர் வெளிநாடு செல்வதற்காக திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு காரில் சென்றனர். மருமகனை விமானத்தில் அனுப்பி விட்டு கணவன்,மனைவி இருவரும் காரில் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

இன்று அதிகாலை 4.20 மணியளவில் புளியரை அருகே கார் வரும் போது இசக்கி அம்மன் கோயில் வளைவில் அருகே திடீரென மாடு ஒன்று குறுக்கே பாய்ந்தது. இதனால் நிலைதடுமாறிய கார் 10 அடி ஆழமுள்ள வயலில் கவிழ்ந்தது . இதில் ஆனந்த செல்வியின் தலைப்பகுதியில் கார் கண்ணாடி குத்தியது. தகவல் அறிந்த போலீஸார் மற்றும் தீயணைப்புத்துறையினர் கணவன், மனைவி இருவரையும் மீட்டு செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி ஆனந்த செல்வி பரிதாபமாக உயிரிழந்தார். பேச்சிமுத்து பாண்டியன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து புளியரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மருமகனை வெளிநாட்டிற்கு அனுப்பி விட்டு வந்த இடத்தில் விபத்தில் மாமியார் உயிரிழ்ந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in