கார் பேனட்டில் சப்பாத்தி சுடும் பெண்!: வைரலாகும் வீடியோ

கார் பேனட்டில் சப்பாத்தி சுடும் பெண்!: வைரலாகும் வீடியோ

வெயில் சுட்டெரிப்பதால் காரின் பேனட்டில் பெண் சப்பாத்தி சுடும் வீடியோ வைரலாகி வருகிறது.

இந்தியாவில் நாளுக்கு நாள் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அடுத்த மூன்று நாட்களில் வடமேற்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை சுமார் 2 டிகிரி செல்சியஸ் உயரும் என்றும், அதன்பிறகு அடுத்த இரண்டு நாட்களுக்கு சுமார் 2 டிகிரி செல்சியஸ் குறையும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தற்போது ராஜஸ்தான், டெல்லி, ஹரியாணா, உத்தரப் பிரதேசம் மற்றும் ஒடிசாவில் தொடர்ந்து 100 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவாகி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் ஏப்ரலில் ஏற்பட்ட மிக நீண்ட வெப்ப அலை இதுவாகும் என்பதால் டெல்லிக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெயில் அதிகரித்துள்ளதால் ஒடிசாவில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஏப்ரல் 30-ம் தேதி வரை மூடப்பட்டுள்ளன. இந்த சூழலில் ஒடிசாவை சேர்ந்த பெண் ஒருவர் காரின் பேனட்டில் சப்பாத்தில் சுடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் உஷ்ணத்தால் சப்பாத்தியை வேக வைப்பது போன்ற அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in