மதம் மாறச்சொல்லி கணவனால் தொடர் சித்ரவதை: 5 மாத கரு சிதைந்து விட்டதாக பெண் கதறல்

மதம் மாறச்சொல்லி  கணவனால் தொடர் சித்ரவதை: 5 மாத கரு சிதைந்து விட்டதாக பெண் கதறல்

தனது மத அடையாளத்தை மறைத்து திருமணம் செய்து கொண்டதுடன், தன்னை மதம் மாறச்சொல்லி கணவன் துன்புறுத்துவதாகவும், அவர் எட்டி உடைத்ததில் 5 மாத கருச்சிதைந்து விட்டதாகவும் இளம்பெண் பரபரப்பு புகார் கூறியுள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவைச் சேர்ந்த சந்த் முகமது தனது அடையாளத்தை மறைத்து இந்துவாக காட்டி தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக இளம்பெண் பரபரப்பு புகார் கூறியுள்ளார். தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், சிகரெட் துண்டுகளால் சூடு வைத்ததாகவும் குற்றம் சாட்டியுள்ள அந்த பெண், தன்னை மதம் மாறச்சொல்லி தனது கணவர் தொடர்ந்து சித்ரவதை செய்ததாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

மதம் மாற முடியாது என்று மறுத்ததால், சூடான எண்ணெய்யை தன் மீது ஊற்றியதாகவும், போலீஸில் புகார் அளித்தால் கொலை செய்வேன் என்று மிரட்டுவதுடன், தன் உறவினர்கள் உன்னைப் பலாத்காரம் செய்துவிடுவார்கள் என்று மிரட்டுகிறார் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் செல்லும் போதெல்லாம் அறைக்குள் பூட்டி வைத்து தாக்குவதாக அந்த இளம்பெண் புகார் கூறியுள்ளார். ஐந்து மாத கர்ப்பிணியான தனது வயிற்றில் சந்த் முகமது எட்டி உதைத்ததில் கருச்சிதைவு ஏற்பட்டது என்றும் கூறியுள்ளார். தற்போது அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் லக்னோவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in