வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை: கணவர் குடும்பத்தினருக்கு தலா 10 ஆண்டு சிறை

நீதிமன்றம் தீர்ப்பு
நீதிமன்றம் தீர்ப்பு

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்த விவகாரத்தில் அவரது கணவர், மாமனார், மாமியார் ஆகியோருக்குத் தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சமையன். டிரைவராக உள்ளார். இவருக்கும் வைரலட்சுமி(27) என்பவருக்கும் 2011-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். சமையன், அவரது தந்தை நாகராஜ்(52), தாய் யசோதை(45) ஆகிய மூவரும் சேர்ந்து வைரலெட்சுமியிடம் வரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்தியுள்ளனர்.

இதனால் இந்தக் கொடுமையைத் தாங்கிக்கொள்ள முடியாமல் வைரலெட்சுமி கடந்த 2015-ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். இவ்விவகாரத்தில் காரியாப்பட்டி போலீஸார் சமையன், அவரது பெற்றோர் நாகராஜ், யசோதை ஆகியோரை ஏற்கெனவே கைது செய்து இருந்தனர். இதுதொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் மாஜிஸ்திரேட் பகவதி அம்மாள் இன்று தீர்ப்பளித்தார். அதில், சமையன், அவரது பெற்றோர் நாகராஜ், யசோதை ஆகியோருக்குத் தலா பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 4 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in