பைக்கை தடுத்து நிறுத்தி பெண் மீது தாக்குதல்: 9 பவுன் நகை பறிப்பு

நகை திருட்டு
நகை திருட்டு

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் டூவீலரில் சென்ற பெண்ணைப் பைக்கில் பின் தொடர்ந்த மர்மநபர், அவரை வழிமறித்து தாக்கி 9 பவுன் செயினை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் குமார். இவரது மனைவி ரேணுகா தேவி. இவர் தன் குழந்தையுடன் அருகில் இருக்கும் உறவினர் வீட்டுக்குத் தன் டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். ரேணுகாதேவி குழந்தையுடன் சென்று கொண்டிருப்பதைப் பார்த்த மர்மநபர் ஒருவர், அவரைப் பைக்கில் பின் தொடர்ந்து வந்தார். அவர் ஹெல்மெட்டும் போட்டு இருந்தார்.

தெய்வானை நகர் பகுதியில் ரேணுகா தேவி சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த மர்மநபர் ரேணுகா தேவியின் பைக்கை முந்திச் சென்று, வழிமறித்து நிறுத்தினார். தொடர்ந்து அவர் கழுத்தில் கிடந்த செயினையும் பறித்தார். அப்போது ரேணுகாதேவி சுதாகரித்துக்கொண்டு தடுக்கவே, அவரைத் தாக்கிவிட்டு மர்மநபர் அவரது கழுத்தில் கிடந்த 9 பவுன் செயினையும் பறித்துச் சென்றுவிட்டார்.

இதனைத் தொடர்ந்து ரேணுகா தேவி, செயின் திருடனை பிடிக்கும் நோக்கத்தில் தன் ஸ்கூட்டியில் அவரை விரட்டிச் சென்றார். அப்போது கீழே விழுந்து காயம் அடைந்த ரேணுகாதேவி மருத்துவமனையிலும் சிகிச்சைப் பெற்றார். இதுகுறித்து ரேணுகாதேவி கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மர்மநபரைத் தேடி வருகின்றனர்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in