‘யாரையும் விடமாட்டேன்’ - சிறை அதிகாரிகளை மிரட்டியதாக டெல்லி ஆம் ஆத்மி அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மீது புகார்!

‘யாரையும் விடமாட்டேன்’ - சிறை அதிகாரிகளை மிரட்டியதாக டெல்லி ஆம் ஆத்மி அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மீது புகார்!

பணமோசடி வழக்கில் திகார் சிறையில் இருக்கும் டெல்லி ஆம் ஆத்மி அமைச்சர் சத்யேந்திர ஜெயின், சிறை அதிகாரிகளை அச்சுறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பணியாளராக இருந்தாலும் சரி, ஓய்வு பெற்ற அதிகாரியாக இருந்தாலும் சரி, யாரையும் விடமாட்டேன் என்று சத்யேந்திர ஜெயின், சிறை அதிகாரிகளுக்கு கடுமையாக எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.

டெல்லி ஆம் ஆத்மி அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது. சிறை அதிகாரிகளை ஜெயின் அச்சுறுத்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. சத்யேந்திர ஜெயின், பணமோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறையால் மே 31-ல் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். தற்போது திகார் சிறையின் ஏஐஜி, சிறை கண்காணிப்பாளர் (SCJ-7), துணை கண்காணிப்பாளர், உதவி கண்காணிப்பாளர் மற்றும் சட்ட அதிகாரி ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர், தங்களுக்கு மிரட்டல் விடுத்ததாக திகார் சிறைத்துறை டிஜியிடம் புகார் அளித்துள்ளனர்.

உதவி சிறைக் கண்காணிப்பாளர் ஜெய்தேவ் மற்றும் துணை சிறைக் கண்காணிப்பாளர் பிரவீன் குமார் ஆகியோர் டிசம்பர் 8-ம் தேதி அளித்த புகாரில் கூறியிருப்பதாவது.., “ நவம்பர் 25ம் தேதி சத்யேந்திர ஜெயினிடம் ஷோகாஸ் நோட்டீஸைக் காட்டுவதற்காக சென்றபோது, “எல்லாவற்றையும் சட்ட அதிகாரி செய்துள்ளார் என்பது எனக்குத் தெரியும். நான் சிறையில் இருந்து வெளியே வந்ததும், அவரிடம் சிசிடிவி காட்சிகளைக் கேட்பேன், எஸ்சிஜே-7 ராஜேஷ் சவுத்ரியை விடமாட்டேன், நான் ஒரு வேலையை எப்படி செய்வது என்று அவருக்குக் கற்றுக் கொடுப்பேன். இந்த முழு விஷயமும் அரசியல். நான் சிறையில் இருந்து வெளியே வந்தவுடன், எனக்கு எதிராக சதி செய்த இந்த அரசு ஊழியர்கள், பணியில் இருந்தாலும் சரி அல்லது ஓய்வு பெற்றாலும் தப்ப முடியாது” என்று தெரிவித்துள்ளனர்.

சத்யேந்திர ஜெயின் சிறைக்குள் மசாஜ் போன்ற சிறப்பு வசதிகளைப் பெறுவதைக் காட்டும் பல வீடியோக்கள் ஏற்கெனவே வெளிவந்தன. ஜெயின் சிறை அறையில் இருந்த சிசிடிவி காட்சிகளை அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in