சென்னையில் நாளை அனைத்துப் பள்ளிகளும் இயங்குமா?: முதன்மை கல்வி அலுவலர் முக்கிய அறிவிப்பு

சென்னையில் நாளை அனைத்துப்  பள்ளிகளும் இயங்குமா?: முதன்மை கல்வி அலுவலர் முக்கிய அறிவிப்பு

சென்னையில் 'மேன்டூஸ்' புயல் காரணமாக டிச.9-ம் தேதி பள்ளிகளுக்கு அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடு செய்ய நாளை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், 'மேன்டூஸ்' புயல் காரணமாக கடந்த 9-ம் தேதி சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அப்பணி நாளினை ஈடு செய்திடும் பொருட்டு நாளை(டிச.17) சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் வெள்ளிக்கிழமை பாடத்திட்டத்தை பின்பற்றி இயங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆரம்ப பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், திருவள்ளூர் மாவட்டத்திலும் அனைத்து அரசு, அரசு உதவிபெறும், நகராட்சி, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் நாளை வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்துவகை மெட்ரிக் பள்ளிகளும் நாளை முழு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in